இயற்கை (Nature)
நம் முன்னோர்கள் கடவுளாய் வணங்கிய இயற்கையை (Nature) இன்று நாம் தேடி கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு சில இடங்களில் இருக்கும் இயற்கையை(Nature) காண ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் இயற்கையை பாதுகாக்க மற்றவர்கள் எதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். நாம் இந்த உலகை விட்டு செல்லும் போது எடுத்து செல்ல ஒன்றும் இல்லை ஆனால் விட்டு செல்ல நமக்கு நிறைய இருக்கிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கமுடியவில்லை என்றாலும் ஒரு செடியாவது வளர்ப்போம் . அதுவும் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. நம் குழந்தைகளுக்கு இயற்கையின் அருமையை அவர்கள் மனதில் ஒரு விதையாக விதைப்போம் .
இயற்கையை நேசிப்போம் ..
இயற்கையை வளர்ப்போம் ...
No comments:
Post a Comment