Our objective is to enhance all the age group people to enjoy their life with peace and pleasure through our simple thought and we hope that our blog will heal each and every person who enters into our mind through "Great Mind Voice"

Ignorance

 அறியா வயசு .....

Ignorance
Ignorance

என் வாழ்க்கையில் நான் பள்ளியில் கணிப்பொறி ஆசிரியையாக பணிபுரிந்த  நேரம் அது .

அப்பொழுது பதினோராம் வகுப்பில் ஒரு மாணவி, அவள் நன்றாக படித்தாலும் பெரியவர்களிடம் பணிவு கிடையாது. அவளைப்பற்றி என் சக ஆசிரியையிடம் விசாரித்த பொழுது, அவரும்  அவள் அப்படித்தான், அதை கண்டுகொள்ளாதீர்கள் என்று  கூறினார்.

ஒரு நாள் வகுப்பில் அவளுடைய நடவடிக்கை எனக்கு மிகுந்த சினத்தை ஏற்படுத்தியது. அதனால் அவளை வகுப்பிலேயே திட்டிவிட்டேன். அன்று மதியம் என்னிடம் வந்து, அவள் நடந்த முறைக்கு மன்னிப்புக் கோரி அழுதாள். நான் பொறுமையாக, அவளிடம் உனக்கு ஆசிரியர்களிடம்  எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை, மேலும் வகுப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் தெரியவில்லை, என  அவளது தவறை சுட்டிக் காட்டினேன். அதோடு உன் வீட்டில் கூட பெற்றோர்கள் கண்டிக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவள், அவளுடைய  தாய், தந்தை இருவருமே சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும்,  தற்போது தான் ஒரு அனாதை ஆசிரமத்தின் கண்காணிப்பில் ஒரு விடுதியில் தங்கி படிப்பதாகவும் கூறினாள்.

அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்ததோடு அவளுடைய நிலையையும் புரிந்து கொண்டேன்.

அந்த அதிர்ச்சியிலிருந்து இருந்து மீள்வதுற்குள் எனக்கு,  அவள் அடுத்து  கூறியது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. அதாவது இந்த மாதிரியான அவளது நடவடிக்கைகளளை தவறு என்று ஒருவர்கூட சுட்டிக்காட்டவில்லை என்றும் இனிமேல் அவள்  வேறு தவறுகள் செய்தால்  அதையும் நான்  சுட்டிக்காட்ட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டாள். 

அதன்பின் அவள் வகுப்பில் நடந்து கொண்ட  விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  அவளுடைய தவறுகளை தான் திருத்திக்கொள்ள  வேண்டும் என்ற  அவளுடைய எண்ணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

பெற்றோர்கள் இல்லாமல் வளர்ந்த அந்த மாணவியின் அறியாத நடவடிக்கை தவறில்லை என்று எனக்கு தோன்றியது.  மேலும் மாணவர்களின் வளர்ப்பு சூழ்நிலை தெரியாமல்  அவர்களை திட்டுவது தவறு என்பதை நான்  உணர்ந்துகொண்டேன் . 

அன்று அந்த மாணவியின் அழுகையை சமாதானம் செய்து அனுப்பிவிட்டேன். ஆனால் இன்றும் அந்த மாணவியை நினைக்கும் பொழுது ஏனோ என் கண்களில்  கண்ணீர்.......

Ignorance

8 comments:

  1. Super is it is your really life story??

    ReplyDelete
  2. Yes we have to handle children carefully

    ReplyDelete
  3. It is your realy life story but you don't worry

    ReplyDelete
  4. இன்றைய தலைமுறைக்கு தேவையான தகவல் 👏👏👏👏👌

    ReplyDelete