அறியா வயசு .....
![]() |
Ignorance |
என் வாழ்க்கையில் நான் பள்ளியில் கணிப்பொறி ஆசிரியையாக பணிபுரிந்த நேரம் அது .
அப்பொழுது பதினோராம் வகுப்பில் ஒரு மாணவி, அவள் நன்றாக படித்தாலும் பெரியவர்களிடம் பணிவு கிடையாது. அவளைப்பற்றி என் சக ஆசிரியையிடம் விசாரித்த பொழுது, அவரும் அவள் அப்படித்தான், அதை கண்டுகொள்ளாதீர்கள் என்று கூறினார்.
ஒரு நாள் வகுப்பில் அவளுடைய நடவடிக்கை எனக்கு மிகுந்த சினத்தை ஏற்படுத்தியது. அதனால் அவளை வகுப்பிலேயே திட்டிவிட்டேன். அன்று மதியம் என்னிடம் வந்து, அவள் நடந்த முறைக்கு மன்னிப்புக் கோரி அழுதாள். நான் பொறுமையாக, அவளிடம் உனக்கு ஆசிரியர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை, மேலும் வகுப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதும் தெரியவில்லை, என அவளது தவறை சுட்டிக் காட்டினேன். அதோடு உன் வீட்டில் கூட பெற்றோர்கள் கண்டிக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவள், அவளுடைய தாய், தந்தை இருவருமே சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும், தற்போது தான் ஒரு அனாதை ஆசிரமத்தின் கண்காணிப்பில் ஒரு விடுதியில் தங்கி படிப்பதாகவும் கூறினாள்.
அதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்ததோடு அவளுடைய நிலையையும் புரிந்து கொண்டேன்.
அந்த அதிர்ச்சியிலிருந்து இருந்து மீள்வதுற்குள் எனக்கு, அவள் அடுத்து கூறியது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. அதாவது இந்த மாதிரியான அவளது நடவடிக்கைகளளை தவறு என்று ஒருவர்கூட சுட்டிக்காட்டவில்லை என்றும் இனிமேல் அவள் வேறு தவறுகள் செய்தால் அதையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டாள்.
Super mom I like this page
ReplyDeleteNice 🙂🙂🙂🙂🙂
ReplyDeleteSuper is it is your really life story??
ReplyDeleteSuper🌹🌹🌹🌹🌹
ReplyDeleteYes we have to handle children carefully
ReplyDeleteIt is your realy life story but you don't worry
ReplyDeleteIts obviously true.
ReplyDeleteஇன்றைய தலைமுறைக்கு தேவையான தகவல் 👏👏👏👏👌
ReplyDelete