நீதி நெறி (Moral Education)
நீதி நெறி (Moral Education) என்பது பிள்ளைகளுக்கு நீதி நெறிகளுடன் இந்த சமூகத்தில், எவ்வாறு நல்லவிதமாக வாழ வேண்டும் என்பதை விளக்குவதே ஆகும். இந்த நீதி நெறிகளை நல்ல கதைகள் மூலமாகவும் விளக்கலாம்.
நீதி நெறிகளை சொல்லி, குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்ப்பதற்காக முன்பு பள்ளிகளில் வாரத்தில் ஒரு வகுப்பு இருக்கும். ஆனால், இன்று அந்நிலை மாறியதுடன் பெற்றோரிடம் அதற்கு முக்கியத்துவம் இல்லாததாகிவிட்டது.
கதைகள் மூலம் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முடியும். இன்று தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களிலும் நிறைய நீதி கதைகள் வந்தாலும், அதை எத்தனை பிள்ளைகள் விரும்பி பார்ப்பர் என்று கூற இயலாது. ஆனால், ஒரு ஆசிரியரோ, பெற்றோரோ அல்லது தாத்தா பாட்டியோ நீதிக் கதைகள் கூறும் பொழுது அந்த பிள்ளைகள் தங்களை அதில் வரும் கதாபாத்திரங்களாக கற்பனை செய்வர். அதே நேரம் கதைகளில் வரும் நீதிகளை தானும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முயற்சிப்பர்.
சமூக அறிவியல் ஆசிரியர் ஒரு மாணவனை கேட்டார், எதிர்காலத்தில் நீ ஒரு V.A.O அலுவலராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து பணியாற்றும் பொழுது, ஒருவர் அவசரமாக உன்னிடம் வந்து வருமானச் சான்றிதழ் தரும்படி கேட்டால் என்ன செய்வாய்? என்றார். அதற்கு மாணவன், "உடனே வேண்டுமெனில், ரூபாய் அதிகமாக கேட்டு வாங்கிக்கொண்டு வருமானச் சான்று கொடுத்துவிடுவேன்" என்றான் அந்த எட்டாம் வகுப்பு மாணவன்.
அம்மாணவன் கூறியது நகைச்சுவையாக இருந்தாலும், நம் சமூகம் எவ்வாறு அவனை மாற்றியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்று பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வரும்பொழுது, பள்ளியின் உள்கட்டமைப்பு சிறியதா? பெரியதா? இவர்கள் பிள்ளைகளை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பார்களா? என்று பார்க்கிறார்களே தவிர, இந்த பள்ளி நம் பிள்ளையை எதிர்காலத்தில் நல்ல ஒழுக்கமுடைய, நேர்மையான மாணாக்கராக உருவாக்குவார்களா? என்று யோசித்து, அதற்கு இந்த பள்ளி என்ன நடவடிக்கை எடுக்கிறது? என்று கேள்வி கேட்பதில்லை. இந்தக் கேள்வி எழாததால், பள்ளி நிர்வாகமும் இன்று அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
பெற்றோர்கள் பகட்டாக இருக்கும் பள்ளிகளே சிறப்புடையது என்ற மனநிலைக்கு மாற்றப்பட்ட நிலையில், மாணவர்களின் எதிர்கால நிலை என்னவாகும்? ஒழுக்கமுடைய மாணவர்களை எப்படி உருவாக்கப் போகிறோம், என்பதை கவனத்துடன் யோசிப்போம்! சிந்திப்போம்!
I like this thought
ReplyDeleteWonderful
ReplyDeleteI like this thought very nice
ReplyDeleteWell said
ReplyDeletethis is very very nice
ReplyDeletewow super
ReplyDeletewow super very nice
ReplyDelete