Our objective is to enhance all the age group people to enjoy their life with peace and pleasure through our simple thought and we hope that our blog will heal each and every person who enters into our mind through "Great Mind Voice"

Appreciate

  மனம் திறந்து பாராட்டுங்கள்......
(Appreciate others.....)

Appreciate others


எல்லோரும் அதிகம் விரும்புவது பாராட்டுகளை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை நாம்  செய்த செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பர் .

மாணவர்கள் ஆசிரியரிடம் இருந்து, மனைவி கணவரிடம் இருந்து, ஆண்கள் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து, குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பாராட்டுகளை எதிர்பார்க்கின்றனர் . ஆனால் இந்த அங்கீகாரம்  பல இடங்களில் கிடைப்பதில்லை.

உணவில்  சுவை கொஞ்சம் குறைந்தாலும் திட்டும் பலர் நன்றாக இருந்தால் வாயைத் திறப்பதில்லை. சிறியவர்கள் தவறு செய்யும்பொழுது திட்டும் நாம்  நல்ல விஷயங்களை செய்யும் பொழுது அதை கண்டுகொள்வதில்லை. பணிபுரியும் இடத்தில், வேலை சரியான நேரத்தில் முடியவில்லை என்றால் உரக்க கத்தும் மேலதிகாரிகள், சரியான நேரத்தில் அந்த வேலையை மிகச் சிறப்பாக முடித்தால் அதை பெரிதாக காட்டிக் கொள்வதில்லை. 

சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் அந்த மாத இறுதிக்குள் குறைந்துவிடும் ஆனால் நமக்கு சில சமயங்களில் கிடைக்கும் அங்கீகாரம் வாழ்வில் என்றென்றும் மகிழ்வைத் தரும்.

ஆதலால் மற்றவர் செய்யும் நல்ல விஷயங்கள் சிறியதாக  இருந்தாலும், பெரியதாக இருந்தாலும்  மனதார பாராட்டுங்கள், ஊக்கப்படுத்துங்கள்.

 இதனால் விளையும் நன்மைகள் பற்பல......

Appreciate others

16 comments: