இராணுவ வீரர்களுக்கு வணக்கம் ( Salute )
![]() |
Soldiers died in Galwan Valley |
சில மாதங்களுக்கு முன்பு சீனாவுடன் போர் ஏற்படப்போகிறது, என்றவுடன் சீனாவை சமாளிக்க நம்மிடம் படை பலம் உள்ளதா? என்று யோசித்தோம். பொருளாதாரம் வீழப்போகிறது என்று கவலைப்பட்டோம். ஆனால், போரில் பங்கு பெறப் போகும் வீரர்களின் குடும்பங்களை பற்றி எத்தனை பேர் சிந்தித்தோம்.
சென்ற வருடம் கூட, நமது இராணுவ வீரர்கள் 20 பேர் கல்வான் பள்ளத்தாக்கில் இறந்து விட்டனர். அதில் எத்தனை பேர், தனது ஒரே ஒரு மகனை இழந்தார்களோ, எத்தனை குழந்தைகள் தந்தையை இழந்ததோ, எத்தனை பெண்கள் அவர்களுடைய கணவனை இழந்தார்களோ என்பது தெரியவில்லை.
போர் மூண்டால் உயிர் போகப் போகிறது என்று தெரிந்தும், இராணுவ வீரர்கள் குடும்பத்தைவிட்டு, பனியிலும், வெயிலிலும் நமக்காக எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால்தான், நாம் இங்கு நிம்மதியாக தூங்க முடிகிறது.
ஒரு இராணுவ வீரரை போல் நடிக்கும் நடிகருக்கு முக்கியத்துவம் தருகிறோம். அவரை பின்தொடர்ந்து செல்கிறோம். ஆனால் ஒரு ராணுவ வீரரை நேரில் கண்டால், அவருக்கு ஒரு வணக்கம்(Salute) கூட நாம் கூறுவதில்லை.
நல்ல கருத்துக்களை கதாநாயகன் மூலம் இந்த உலகிற்கு விளக்கி அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, ஏற்படுத்தியதே திரைப்படம். ஆனால் இன்று கதைகளில் வரும் நல்ல கருத்துக்களை பின்பற்றாமல் திரைப்படங்களில் வரும் நடிகர் நடிகைகளை பின்தொடர்ந்து ஓடுவதை விட்டுவிட்டு, உண்மையில் மக்களுக்காகவும் தேசத்திற்காகவும் பாடுபடுபவர்களைப் போற்றுவோம்.
நமது குழந்தைகளுக்கு ஆசிரியர்களை பார்த்தால், வணக்கம்(Salute) தெரிவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது போல் நமக்காக உயிரைக் கூட தியாகம் செய்ய தயாராக இருக்கும் இராணுவ வீரர்களுக்கும் வணக்கம்(Salute) சொல்ல பழக்கப்படுத்த வேண்டும்.
nice
ReplyDeleteVery good
ReplyDeleteAll concept are nice but why don't you update
ReplyDelete