Our objective is to enhance all the age group people to enjoy their life with peace and pleasure through our simple thought and we hope that our blog will heal each and every person who enters into our mind through "Great Mind Voice"

Parents

                                                   

பெற்றோர்களுக்கு ( To Parents ) 

Parents



இந்த வலைப்பதிவு அனைத்து வகையான மக்களுக்கும் குறிப்பாக பெற்றோர்களுக்கு(Parents) பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் .

போட்டி திறமையை வளர்க்கும்
  பொறாமை குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கும். 

 நம் குழந்தைகளின் மனதில் நல்ல உயர்வான எண்ணங்களை  உருவாக்க மற்ற குழந்தைகளை அவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீ நன்றாக படிக்க வேண்டும் என்பதற்கும், நீ அவனை  விட நன்றாக படிக்க வேண்டும் என்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. எல்லா சூழலிலும் நீ தான் முதன்மையாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதும், உன்னால் எதுவும் முடியாது என்று கூறி குழந்தையை தாழ்த்துவதும்  மிக மோசமான விளைவுகளையே உருவாக்கும்.

குறிப்பாக குழந்தைகள் தன்னைப்பற்றி குறைவாக பிறருடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லை. அதை செய்யும்பொழுது அவர்கள் மனம் புண்படுவதோடு பொறாமைப்படவும் ஆரம்பிக்கும்.

பெரியவர்களாகிய நாமே, நம்மை பிறருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? பின்பு குழந்தைகள் மட்டும் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? சற்று சிந்தியுங்கள். குழந்தைகளின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அடுத்த இலக்குகளை நிர்ணயுங்கள்.   

எடுத்துக்காட்டாக தேர்வுகளில் சென்ற முறை  அவர்கள் எடுத்த மதிப்பெண்களை  விட சற்று அதிகமாக எடுத்தால் கூட பாராட்டுங்கள் .

பொதுவாக ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சி சுற்றுப்புற சூழலை பொருத்து அமைகிறது. அதற்கான நல்ல சுற்றுப்புற சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை. அதை விடுத்து குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டு மனதை புண்படுத்துவது பெற்றோர்களின் அறியாமை.

சோம்பல்  களைந்து
   சுறுசுறுப்பு  விதைத்து 
      உழைப்பால் உயர்ந்து 
          நேர்மையால் சிறந்து 
             இளையோர் வாழ்வில் 
                 வசந்தம் வளர்ப்போம்...............


Parents








10 comments: