பெற்றோர்களுக்கு ( To Parents )
பொறாமை குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்கும்.
நம் குழந்தைகளின் மனதில் நல்ல உயர்வான எண்ணங்களை உருவாக்க மற்ற குழந்தைகளை அவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீ நன்றாக படிக்க வேண்டும் என்பதற்கும், நீ அவனை விட நன்றாக படிக்க வேண்டும் என்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. எல்லா சூழலிலும் நீ தான் முதன்மையாக திகழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதும், உன்னால் எதுவும் முடியாது என்று கூறி குழந்தையை தாழ்த்துவதும் மிக மோசமான விளைவுகளையே உருவாக்கும்.
குறிப்பாக குழந்தைகள் தன்னைப்பற்றி குறைவாக பிறருடன் ஒப்பிடுவதை விரும்புவதில்லை. அதை செய்யும்பொழுது அவர்கள் மனம் புண்படுவதோடு பொறாமைப்படவும் ஆரம்பிக்கும்.
பெரியவர்களாகிய நாமே, நம்மை பிறருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? பின்பு குழந்தைகள் மட்டும் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? சற்று சிந்தியுங்கள். குழந்தைகளின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அடுத்த இலக்குகளை நிர்ணயுங்கள்.
எடுத்துக்காட்டாக தேர்வுகளில் சென்ற முறை அவர்கள் எடுத்த மதிப்பெண்களை விட சற்று அதிகமாக எடுத்தால் கூட பாராட்டுங்கள் .
பொதுவாக ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சி சுற்றுப்புற சூழலை பொருத்து அமைகிறது. அதற்கான நல்ல சுற்றுப்புற சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர்களின் கடமை. அதை விடுத்து குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டு மனதை புண்படுத்துவது பெற்றோர்களின் அறியாமை.
Good thought
ReplyDeleteGood thought
ReplyDeleteNice thoughts
ReplyDeleteSuper keep it up nice information to parents very useful for parents and childrens
ReplyDeleteSuper
ReplyDeleteVery nice
ReplyDeleteNice thought and inspiring by ashwin
ReplyDeleteNice thought it is very important for parents and children's
ReplyDeletethe best approach towards children
ReplyDelete👏👏👏சிறப்பு
ReplyDelete